அரசியல்

எல்லோரும் எம்ஜிஆர் ஆகி விட முடியாது - நாஞ்சில் சம்பத் அதிரடி

நடிகர்கள், அரசியலில் கால் ஊன்ற முடியாது

தந்தி டிவி

அரசியலில் குதித்துள்ள நடிகர்கள் யாரும் ஒருபோதும் எம்ஜிஆர் ஆகி விட முடியாது என்று நாஞ்சில் சம்பத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழக அரசியலில், நடிகர்களால் நிச்சயம் கால் ஊன்ற முடியாது என்றார்.

நடிகர்கள் கட்சி துவங்குவதால், திராவிட கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என செய்தியாளர்கள் கேட்டபோது, காடு, நிலம், காற்று , நீர் இருக்கும் வரைதிராவிடம் இருக்கும் என்றும், வேறு எந்த இயக்கத்திற்கும் இங்கு இடமில்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். அரசியலை விட்டு தாம் வெகு தொலைவுக்கு வந்து விட்டதாகவும், இனி எந்த கட்சியிலும் இணையப்போவதில்லை என்றும் நாஞ்சில் சம்பத் உறுதிபட கூறினார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு