முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது . புகழ் பெற்ற மருத்துவர்கள் தணிகாசலம், கோபால் உள்ளிட்ட பலர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி, கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய மருத்துவர்கள் மறைந்த கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினர். காவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.