மேட்டூர் நகராட்சி மாதாந்திர கூட்டத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி தி.மு.க. கவுன்சிலர்கள் மண்டியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர், சாலை, மின்விளக்கு, சாக்கடை உள்ளிட்ட வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை என குற்றம்சாட்டிய அவர்கள், பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தினர். நகராட்சி ஆணையாளர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.