அரசியல்

"ஆபாச வீடியோ... ஆதீனத்திற்கு மிரட்டல்." - மகாராஷ்டிராவில் சிக்கிய பாஜக நிர்வாகி - பகீர் பின்னணி

தந்தி டிவி

தருமபுரம் ஆதீனத்திடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில், மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம் கைது செய்யப்பட்டுள்ளார். தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோ இருப்பதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக பாஜக மாவட்ட தலைவர் அகோரம் உள்ளிட்ட 9 பேர் மீது கடந்த 25-ஆம் தேதி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதில் 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், பாஜக மாவட்ட தலைவர் அகோரம் தலைமறைவானார். இதைத் தொடர்ந்து அவரை தீவிரமாக தேடி வந்த போலீசார், மகாராஷ்டிரா மாநிலத்தில் அவரை கைது செய்தனர். இதனடிப்படையில் அவரை தரங்கம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், மயிலாடுதுறை கிளை சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட அகோரத்திற்கு 15 நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு