தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் குறித்து, சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கோவிந்தராஜ் ஐஏஎஸ் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் வைத்தியநாதன் ஆகியோரும் உடனிருந்தனர். அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கும் இத்திட்டத்திற்காக, பாதுகாப்புப் பெட்டகங்கள் அமைக்கப்பட்டு, பிரத்யேக செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த செயலி குறித்தும் ஜெகநாத் மிஸ்ரா ஆய்வு செய்தார். கம்பம் அரசு மருத்துமனையைத் தொடர்ந்து, காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா ஆய்வு மேற்கொண்டார். மேலும் தேனி மற்றும் பெரியகுளம் அரசு மருத்துவமனைகளிலும் விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
#JagannathMisraMLA #Theni #ThaimamanThangaMothiram