அரசியல்

மனிதநேய மக்கள் கட்சி செயற்குழு கூட்டத்தில் பரபரப்பு

நாடாளுமன்ற தேர்தலில், மனித நேய மக்கள் கட்சிக்கு திமுக இடம் ஒதுக்காத நிலையில், தங்களது நிலைப்பாடு குறித்து இன்று அறிவிப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்திருந்தார்.

தந்தி டிவி

நாடாளுமன்ற தேர்தலில், மனித நேய மக்கள் கட்சிக்கு திமுக இடம் ஒதுக்காத நிலையில், தங்களது நிலைப்பாடு குறித்து இன்று அறிவிப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்திருந்தார். அதன்படி விழுப்புரத்தில் இன்று மனிதநேய மக்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஹைதர் அலி பங்கேற்க வந்தார். அப்போது அவருடன் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆதரவாளர்களும் வந்திருந்தனர். இந்நிலையில் ஹைதர் அலி மட்டும், செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க, அனுமதிக்கப்பட்டார். மற்றவர்கள் அனுமதிக்கப்படவி​ல்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், தங்களையும் செயற்குழு கூட்டத்தில் அனுமதிக்க வலியுறுத்தி, மண்டபத்தின் வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்