அரசியல்

"களைய வேண்டிய துரோகிகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தவர் மகேந்திரன்" - கமல் ஆவேசம்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து மகேந்திரன் விலகியது குறித்து, கமல் ஆவேசமாக பதில் அளித்துள்ளார்.

தந்தி டிவி

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து மகேந்திரன் விலகியது குறித்து, கமல் ஆவேசமாக பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், களைய வேண்டிய துரோகிகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தவர் மகேந்திரன் என்று கூறியுள்ளார். முகவரி கொடுத்தவர்களின் முகங்களையே எடுத்துக் கொள்ள துணிந்தவர் மகேந்திரன் என்று என்று தெரிவித்துள்ள கமல், கட்சிக்காக உழைக்க தயாராக இருந்த பல நல்லவர்களை தலையெடுக்க விடாமல் செய்ததே மகேந்திரனின் சாதனை என்று குற்றம்சாட்டியுள்ளார். தன்னுடைய திறமையின்மையையும், நேர்மையின்மையையும் அடுத்தவர் மீது போட்டு அனுதாபம் தேட மகேந்திரன் முயற்சிப்பதாகவும் கமல் விமர்சித்துள்ளார்.

தன்னை எப்படியும் நீக்கிவிடுவார்கள் என்பதை தெரிந்துக்கொண்டு மகேந்திரன் தானாகவே விலகி கொண்டதாகவும்,ஒரு களையே தன்னை களையென்று புரிந்துக்கொண்டு தன்னைத்தானே நீக்கி கொண்டதில் தனக்கு மகிழ்ச்சிதான் என்றும், இனி கட்சிக்கு ஏறுமுகம் தான் என்றும் கமல் கூறியுள்ளார். எனது வாழ்க்கையில் அனைத்து விஷயங்களும் வெளிப்படையானவை என கூறியுள்ள கமல் நான் செய்த தவறுகளை மறைக்கவோ, மறுக்கவோ ஒருபோதும் முயற்சித்தது இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தோல்வியின் போது கூடாரத்தை பிய்த்துக்கொண்டு ஓடும் கோழைகளை பற்றி நாம் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை என்றும், கொண்ட கொள்கையில் தேர்ந்த பாதையில் சிறிதும் மாற்றமில்லை என்றும் தனது அறிக்கையில் கமல் கூறியுள்ளார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்