அரசியல்

முதலமைச்சராக நீடிப்பாரா, உத்தவ் தாக்கரே? - மே 28ஆம் தேதியோடு 6 மாத கெடு நிறைவு//

எம்.எல்.ஏ.வாகவோ, எம்.எல்.சியாகவோ இல்லாமல் மகாராஷ்டிராவின் முதலமைச்சராக இருக்கும் உத்தவ் தாக்கரேவின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் தேதி காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் சிவசேனாவின் தலைவர் உத்தர் தாக்கரே முதல்வரானார். அப்போது அவர் எம்.எல்.ஏ.வாகவோ எம்.எல்.சி.யாகவோ இல்லை. ஆகவே அவர் தனது முதலமைச்சர் பதவியை காப்பாற்றி கொள்ள 6 மாதத்திற்குள், அதாவது அடுத்த மாதம் 28-ஆம் தேதிக்குள் எம்.எல்.சி. அல்லது எம்.எல்.ஏ. ஆக வேண்டும்.

கடந்த 24ஆம் தேதி நடக்க இருந்த எம்.எல்.சி. தேர்தல் மூலம் தனது முதலமைச்சர் பதவியை காப்பாற்றிக் கொள்ளலாம் என உத்தவ் தாக்கரே கருதி இருந்த நிலையில், கொரோனா காரணமாக அந்த தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஆளுநர் ஒதுக்கீட்டின் கீழ் காலியாக இருக்கும் 2 எம்.எல்.சி. பதவிகளில் ஒன்றில் உத்தவ் தாக்கரேயை எம்.எல்.சி.யாக நியமிக்குமாறு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரிக்கு மகாராஷ்டிர மாநில அமைச்சரவை பரிந்துரை செய்தது. ஆனால் உத்தவ் தாக்கரேயை எம்.எல்.சி.யாக நியமிக்காமல் ஆளுநர் தொடர்ந்து அமைதி காத்து வருவது சிவசேனா தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்