திருவாரூர் சட்டமன்ற வேட்பாளர் பூண்டி கலைவாணனை ஆதரித்து மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் மகன் தமிழரசு மற்றும் நடிகர் அருள்நிதி ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் நகர வீதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட இவர்களை மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மேலும் நடிகர் அருள்நிதி உடன் மக்கள் செல்பி எடுத்துக்கொண்டனர்.