தமிழகத்தில் தண்ணீர் இல்லாததால் புல் கூட வளர முடியாத நிலையில், தாமரை எப்படி மலரும்? என கேள்வி எழுப்பி இருந்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பதிலடி கொடுத்துள்ளார். சென்னை - தியாகராய நகர் கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்றார். பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்திருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு, தமிழிசை சவுந்திரராஜன் கடும் கண்டனம் தெரிவித்தார்.
"மழை வந்தால் சூரியன் மறையும், தாமரை மலரும்"
திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், தமிழகத்தில் தண்ணீர் இல்லை, புல்கூட முளைக்காத சூழலில், தாமரை மலர்ந்துவிடுமா? என்று பாஜக-வை விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், மழை வந்தால், சூரியன் மறையும், குளம் நிறையும், தாமரை மலரும் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு தாமரை மலர சூரிய சக்தி தேவை என்றும் சூரிய சக்தி நினைத்தால் தாமரை கருகும் என்றும் தமிழிசைக்கு பதிலடியாக ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதிகாலையில் சூரியன் உதிப்பதற்குள் இதழ்விரித்து தாமரை மலர்கிறது. இது அன்றாட நிகழ்வு ..மேக மூட்டத்தில் சூரியன் மறைந்தாலும் தாமரை மலரும்,சூரிய சக்தி செடியில் இருக்கும் மலரைக் கருகச்செய்யும் குளத்து நீரில் மிதக்கும் தாமரையை,கருகச்செய்யாது,கருகச்செய்யவும் முடியாது...இது இயற்கை நியதி. https://t.co/QXXd6oWqK3