அரசியல்

ஒரே ஒரு வாக்கு - `18 கி.மீ' மலையேறிய அதிகாரிகள்

தந்தி டிவி

கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு வரும் 26-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், கேரளாவில் தபால் ஓட்டுக்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக உடல்நலம் குன்றிய 92 வயது முதியவரின் வாக்கை சேகரிப்பதற்காக, 3 பெண்கள் உட்பட 9 பேர் கொண்ட தேர்தல் அதிகாரிகள் குழு, 18 கிலோமீட்டர் தூரம் மலையேறி சென்றுள்ளனர். கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள எடமலக்குடி என்ற பழங்குடியின மலைக்கிராமத்தில் வசிக்கும், சிவலிங்கம் என்ற முதியவரின் வாக்கை பதிவு செய்து வந்தனர். வனப்பகுதிக்குள் சென்றதால் தசைப்பிடிப்பு மற்றும் உடல் சோர்வு உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை சந்தித்தாலும், ஒரு சவாலான பணியை சிறப்பாக செய்து முடித்ததாக அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்