அரசியல்

4-ம் கட்டமாக 71 தொகுதிகளுக்கு திங்கள்கிழமை தேர்தல் - இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது

மக்களவை தேர்தல் நான்காம் கட்ட வாக்குப்பதிவு 71 தொகுதிகளில் வரும் திங்கள்கிழமை நடைபெற உள்ளது.

தந்தி டிவி

இந்நிலையில், இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இதுவரை 3 கட்டமாக மொத்தம் 303 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் முடிவடைந்த நிலையில் நான்காம் கட்டத் தேர்தல் 9 மாநிலங்களில் உள்ள 71 தொகுதிகளுக்கு வரும் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. மகாராஷ்டிராவில் 17 தொகுதிகள் ராஜஸ்தான், உத்தரப் பிரதேசத்தில் தலா 13 தொகுதிகள் மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள் மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசாவில் தலா 6 தொகுதிகளுக்கு திங்களன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதேபோன்று பிகாரில் 5 தொகுதிகளுக்கும் ஜார்கண்ட்டில் 3 தொகுதிகளுக்கும் ஜம்மு, காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் அன்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரசாரம் மேற்கண்ட மாநிலங்களில் உச்சக்கட்டத்தில் நடைபெற்று வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்