கர்நாடகா முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, மீண்டும் பாஜகவில் இணைந்தது குறித்து காங்கிரஸ் விமர்சித்துள்ளது. ஜனார்த்தன ரெட்டி மீதுள்ள வழக்குகள் முடிக்கப்படுவதோடு, கர்நாடகாவில் சட்டவிரோத சுரங்க தொழிலை, எந்தவித தடங்களுமின்றி மேற்கொள்வார் எனக் குற்றம்சாட்டியுள்ளது. ஜனார்த்தன ரெட்டி மீதுள்ள 9 சிபிஐ வழக்குகள் முடிக்கப்படும் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.