நெடுஞ்சாலை ஒப்பந்தம் தொடர்பான முதலமைச்சர் மீதான திமுகவின் புகாரை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.