அரசியல்

Kulithalai | DMK | பூக்களைக் கட்டி வாக்கு சேகரித்த குளித்தலை திமுக வேட்பாளர் சூரியனூர் சந்திரன்

பூக்களைக் கட்டி வாக்கு சேகரித்த குளித்தலை திமுக வேட்பாளர் சூரியனூர் சந்திரன்

thanthitv

Kulithalai | DMK | TN Election 2026 | பூக்களைக் கட்டி வாக்கு சேகரித்த குளித்தலை திமுக வேட்பாளர் சூரியனூர் சந்திரன் #kulithalai #DMK #tnelection2026 #karur #thanthitv பூக்களைக் கட்டி வாக்கு சேகரித்த குளித்தலை திமுக வேட்பாளர் குளித்தலை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் சூரியனூர் சந்திரன், சுங்ககேட் ரவுண்டானா பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் உதயசூரியன் சின்னத்திற்குத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரசாரத்தின் போது திடீரென ஒரு பூக்கடைக்குள் சென்ற சூரியனூர் சந்திரன், அங்கிருந்த தொழிலாளர்களுடன் அமர்ந்து ரோஜாப்பூ மாலை கட்டி ஆதரவு திரட்டினார். தொடர்ந்து அங்கிருந்த இளம் பெண் வாக்காளர்களைச் சந்தித்த அவர், "புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை 1,500 ரூபாயாக உயர்த்தப்படும்" என்ற தேர்தல் வாக்குறுதியை எடுத்துக் கூறினார். வேட்பாளரின் எதார்த்தமான அணுகுமுறையைக் கண்டு உற்சாகமடைந்த இளம்பெண்கள், தங்களது பெற்றோருடன் நின்று அவருடன் ஆர்வமாகச் செல்பி எடுத்துக் கொண்டனர்.

BREAKING || "9 பேருக்கும் சாகும் வரை தூ*கு..." - "இப்படி ஒரு தீர்ப்பு...இதுவே முதல்முறை"

Sathankulam "தந்தை, மகனை நிர்வாணப்படுத்தி... சொல்லவே மனம் பதறுகிறது" - நீதிபதி சொன்ன வார்த்தை

BREAKING || நாடே காத்திருக்கும் சாத்தான்குளம் வழக்கு - தண்டனையை வாசிக்கும் நீதிபதி

BREAKING | வேட்புமனு தாக்கல் செய்யாத விஜய் அறிவித்த வேட்பாளர்கள்..கடைசி நேரத்தில் தவெக எடுத்த முடிவு

Breaking | TVK Vijay | நாளை சென்னையில் மீண்டும் இறங்கும் விஜய்? | ஸ்பாட் இதுதான்..