KN Nehru | MK Stalin | DMK | KN நேரு வீடுகளில் நடந்த சோதனை - ஸ்டாலின் கிளப்பிய பரபரப்பு
கே.என்.நேருவின் வீடுகளில் சோதனை - ஸ்டாலின் கண்டனம் முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கும் நிலையில், சட்டமன்றக் கூட்டத்தொடரும் நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், அரசியல் காரணங்களுக்காகவே கே.என்.நேருவுக்கு தொடர்புடைய இடங்களில் த.வெ.க. அரசு சோதனையை மேற்கொண்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கை திசைதிருப்பும் முயற்சி என்றும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.