அரசியல்

ஜாமின் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்த கெஜ்ரிவாலுக்கு ஷாக் கொடுத்த ED.. ஐகோர்ட்டில் திக்..திக்..

தந்தி டிவி

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு வழங்கிய ஜாமீனுக்கு தடை கோரிய அமலாக்கத் துறையின் மனு மீதான டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று பிற்பகல் 2:30 மணிக்கு வெளியாகிறது.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு வழங்கிய ஜாமீன் தடை கோரிய அமலாக்கத் துறையின் மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுதீர் குமார் ஜெயின் முன் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது அமலாக்க துறை மற்றும் கெஜ்ரிவால் ஆகிய இரு தரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி உயர்நீதிமன்றம், அமலாக்கத் துறையின் மனு மீதான தீர்ப்பு இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்ததோடு, அதுவரை டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது.

TN Election | ECI | Gyanesh Kumar | "ஒரு சின்ன பிரச்சனை தான்..." - சுவாரஸ்யமாக சொன்ன சுபேர்

TN Election 2026 | "இதெல்லாம் நிறுத்தணும்" - ஒரே போடாக போட்ட டி.வி சோமு

TVK Vijay Karur Stampede Case | CBI விசாரணை முடிந்தது - இனி விஜய்?

Election Commission | TN Election | DMK | தேர்தல் தேதி - திமுகவில் இருந்து வந்த முதல் REACTION

#Breaking || Puducherry Election 2026 | நீடிக்கும் இழுபறி.. புதுச்சேரிக்கு அதிர்ச்சி