அரசியல்

தண்ணீர் பிரச்சினை என்பது மக்கள் பிரச்சினை - கரூர் எம்பி ஜோதிமணி

தண்ணீர் பிரச்சினை, தனிப்பட்ட கட்சி பிரச்சினை அல்ல கரூர் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட அஞ்சூர், துக்காச்சி , கார்வழி உள்ளிட்ட பகுதிகளில் கரூர் எம்பி ஜோதிமணி, அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில் பாலாஜி ஆகியோர் குடிநீர் பிரச்சினை தொடர்பாக ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி, தண்ணீர் பிரச்சினை என்பது மக்கள் பிரச்சினை எனவும் அது தனிப்பட்ட கட்சி பிரச்சினை அல்ல எனவும் தெரிவித்தார். மேலும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தெரியாமல், மாவட்ட ஆட்சியர் தண்ணீர் பிரச்சினை தொடர்பாக ஆய்வு கூட்டம் நடத்தியது மிகப்பெரிய தவறு என்றும் ஜோதிமணி குற்றம் சாட்டினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்