அரசியல்

சர்ச்சை பேச்சு - கமல்ஹாசனுக்கு முன் ஜாமின்...

மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் சர்ச்சை பேச்சு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இன்று கரூர் நீதிமன்றத்தில் அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கடந்த மே மாதம் 12ஆம் தேதி பிரசாரம் செய்த கமல், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கமல் மீது அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் கமல் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதியரசர் புகழேந்தி தொடர்புடைய நீதிமன்றத்தில் ஆஜராகி இரண்டு தனி நபர் ஜாமீன் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து கரூர் நீதிமன்றத்தில் நீதிபதி விஜய் கார்த்திக் முன்பு கமல் ஆஜரானார். ஆவணங்களை பரிசோதித்த நீதிபதி, கமலுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்