கமல்ஹாசன் நடிக்கும் தேவர் மகன் -2 திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமிக்கு, கருணாஸ் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் யார் என்ன படம் எடுக்கணும், என்ன பெயர் வைக்கணும் என்பதை கதாநாயகனும், தயாரிப்பாளரும் முடிவு செய்வார்கள் என்று கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். தேவர்மகன் -2 படத்தை வைத்து தம்மை சாதி தலைவராக கிருஷ்ணசாமி காட்ட நினைப்பதாகவும் கருணாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.