ராகுல் காந்தியின் வேண்டுகோள் :
ஜெயலலிதாவை போலவே, கருணாநிதியும் தமிழக மக்களின் குரலாக இருந்தார். அவருக்கு மெரினா கடற்கரையில் இடம் தர வேண்டும். தமிழ்நாட்டின் தற்போதைய தலைமை பெருந்தன்மையுடன் நடந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கிறேன் - ராகுல் காந்தி
ரஜினிகாந்தின் வேண்டுகோள் :
மதிப்பிற்குரிய அமரர் கலைஞர் அவர்களுக்கு, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய, தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அது தான், நாம் அந்த மாமனிதருக்கு கொடுக்கும் தகுந்த மரியாதை என ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டடுள்ளார் .
தமிழக தலைவர்களின் வேண்டுகோள் :
மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்க செய்ய இடம் ஒதுக்க வேண்டும் - தமிழக அரசுக்கு, கி.வீரமணி, ராமதாஸ், திருநாவுக்கரசர், வைகோ, விஜயகாந்த், முத்தரசன், பாலகிருஷ்ணன், குலாம்நபி ஆசாத், வைரமுத்து வேண்டுகோள்
மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க வேண்டும் - தமிழக அரசுக்கு தமாகா தலைவர் ஜிகே.வாசன் கோரிக்கை
இதனை தொடர்ந்து மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி கோரி, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷிடம் திமுக முறையீடு செய்ததை தொடர்ந்து,மனுவை இரவு 10.30க்கு(07.08.2018) விசாரிக்க நீதிபதியால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.