அரசியல்

கருணாநிதி நினைவு நிகழ்ச்சி - பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கலைஞர் புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

தந்தி டிவி

ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பாரதிராஜா, நடிகர் விவேக், நக்கீரன் கோபால், தமிழச்சி தங்கபாண்டியன், பேராசிரியர் அவ்வை நடராஜன்ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக, கருணாநிதியின் குடும்பத்தினர், அவரது உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதை தொடர்ந்து பேசிய பாரதிராஜா, வைரமுத்து, நடிகர் விவேக் உள்ளிட்டோர் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினர்.

கருணாநிதி நினைவு இரங்கல் கவி அரங்கம்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவாக, கலைஞரின் புகழுக்கு வணக்கம் என்ற தலைப்பில் மதுரையில் இரங்கல் கவியரங்கம் நடைபெற்றது. இதில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட திமுகவினரும், மு.மேத்தா, எஸ்.ராமகிருஷ்ணன், பா.விஜய் உள்ளிட்ட இலக்கியவாதிகளும் கலந்து கொண்டனர். மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவபடத்திற்கு மரியாதை செலுத்திய பேச்சாளர்கள், பின்னர் அவருக்கு கவிநடையிலும், இலக்கிய நடையிலும் புகழாரம் சூட்டினர்.

கடைசி தமிழன் இருக்கும் வரை கருணாநிதிக்கு மரணமில்லை - வைரமுத்து

கருணாநிதியே இறுதியில் விசித்திர வழக்கை சந்தித்தார் - பா.விஜய்

திருவள்ளுவருக்கு செய்தி தொடர்பாளரே கருணாநிதி தான் - விவேக்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்