அரசியல்

கர்நாடகாவில் 48 மணி நேரத்துக்குள் ஆட்சி கவிழும் - மத்திய அமைச்சர் சதானந்த கவுடா நம்பிக்கை

இன்னும் 48 மணி நேரத்திற்குள் கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும் என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இன்னும் 48 மணி நேரத்திற்குள் கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும் என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களவை தேர்தலில் போட்டியிடும் தான், நிச்சயம் வெற்றி பெறுவேன் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு மீது ஏராளமான எம்எல்ஏ​​க்கள் அதிருப்தியில் உள்ளதாகவும் நாளை தேர்தல் முடிவுகள் வந்ததும் ஆட்சி கவிழ்ந்து விடும் எனவும் தெரிவித்தார். காங்கிரஸ் கூட்டணியில் உள்ள பலர் பாஜக தலைமையுடன் தொடர்பில் உள்ளதாகவும் கூறினார்.இன்னும் இரண்டு நாட்களில் கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்கும் எனவும் அவர் தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்