அரசியல்

கர்நாடகாவில் மழை பெய்தால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் - கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் ரேவண்ணா

கர்நாடகாவில் மழை பெய்தால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் ரேவண்ணா கூறினார்.

தந்தி டிவி
கர்நாடகாவில் மழை பெய்தால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் ரேவண்ணா கூறினார். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் உள்ள சாரங்கபாணி கோயிலில் முன்னாள் பிரதமர் தேவகவுடா சாமி தரிசனம் செய்தார். அவருடன் வந்த அவரது மூத்த மகனும் கர்நாடக மாநில, பொதுப்பணித்துறை அமைச்சருமான ரேவண்ணா, தமிழகத்துக்கான தண்ணீர் குறித்த கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார். தற்போது, கர்நாடகாவில் போதுமான தண்ணீர் இல்லை என்றும், மழை இல்லை என்றும் கூறினார். மழை பெய்தால் மட்டுமே, தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என்றும் ரேவண்ணா தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்