"முந்தைய அரசியல்வாதிகளை போல் இப்போது இல்லை" - ரமேஷ்குமார்
பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் கே.ஆர். ரமேஷ்குமார், முந்தைய அரசியல்வாதிகளை போல் தற்போதைய அரசியல்வாதிகள் இல்லை என்று வேதனை தெரிவித்தார். தற்போதைய நிலை மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாக குறிபிட்ட அவர், நிறுத்தி வைக்கப்பட்ட நிதி மசோதா, நாளை தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஆஜராகும்படியும் கூறியுள்ளார். பேட்டியின் போது, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டியின் மறைவை நினைவு கூர்ந்து, கண்ணீர் விட்டு அழுதார்.