Kanyakumari | Minister Srinath | ஆய்வில் சட்டென அமைச்சர் ஸ்ரீநாத் செய்த செயல் - இணையத்தில் வைரலான வீடியோ கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்பிடி துறைமுகங்களை ஆய்வு செய்த அமைச்சர் ஸ்ரீநாத், கடலில் படகு ஓட்டிச் சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், மாவட்டத்தின் கடற்கரைப் பகுதிகள் மற்றும் மீன்பிடி துறைமுகங்களில் ஆய்வு மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக முட்டம் பகுதியில் உள்ள தனியார் மீன்பிடி துறைமுகத்தைப் பார்வையிட்ட அவர், கடலில் சிறிது தூரம் படகில் சென்று கடலோரப் பகுதிகளை ஆய்வு செய்தார்