அரசியல்

மெஜாரிட்டி உள்ளது என்பதால் மைனாரிட்டிகளை காயப்படுத்த வேண்டும் என அர்த்தமல்ல - திமுக எம்.பி.கனிமொழி

மெஜாரிட்டி இருக்கிறது என்பதற்காகவே மைனாரிட்டிகளை காயப்படுத்த வேண்டும் என அர்த்தமல்ல என திமுக எம்பி கனிமொழி மக்களவையில் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
மெஜாரிட்டி இருக்கிறது என்பதற்காகவே மைனாரிட்டிகளை காயப்படுத்த வேண்டும் என அர்த்தமல்ல என திமுக எம்பி கனிமொழி மக்களவையில் தெரிவித்துள்ளார். ஆங்கிலோ இந்திய நியமன பதவிகளை நீக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மீது உரையாற்றிய அவர், இந்தியாவில் சுமார் 3 லட்சம் ஆங்கிலோ இந்தியன் சமூக மக்கள் இருப்பதாகவும் தமிழகத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர், வசித்து வருவதாகவும் குறிப்பிட்டார். நாட்டுக்காக ஆங்கிலோ இந்தியன் மக்கள் அளித்த பங்களிப்பை மறந்து விடமுடியாது என்றும் கனிமொழி கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்