Kanimozhi Santhosh MLA | யார் அரசியலுக்கு வந்தாலும் வரவேற்போம், இது ஜனநாயக நாடு - MLA கனிமொழி
நடிகர் தனுஷின் அரசியல் வருகை குறித்துத் கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ கனிமொழி முக்கியக் கருத்து தெரிவித்துள்ளார். கோவை சரவணம்பட்டியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக முற்றிலும் இலவசமாக அமைக்கப்பட்ட ‘கற்கை AI’ மினி ஸ்கூலைத் திறந்து வைத்தப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், செயற்கை நுண்ணறிவின் அவசியத்தை அனைத்துத் தரப்பு மக்களும் உணர்ந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். நடிகர் தனுஷுக்கும் முதல்வர் விஜய்க்கும் அரசியல் போட்டி இருப்பதாகத் தனுஷ் ரசிகர்கள் தெரிவிப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த எம்.எல்.ஏ கனிமொழி, "இது ஜனநாயக நாடு; யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். தமிழக வெற்றிக் கழகம் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது. ஆரோக்கியமான விவாதமும் போட்டியும் இருக்கட்டும்" எனத் தெரிவித்தார். மேலும், தொகுதியில் நிலவும் வெள்ளப் பாதிப்புகள் குறித்துப் பேசிய அவர், தவெகவின் குரலால் மக்கள் சந்தித்து வரும் அவதிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்டார். மழைநீர் தேங்கும் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண்பது சவாலானது என்றாலும், அடிப்படை வடிகால் வசதிகள் குறித்த கோரிக்கைகள் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விரைவில் அனைத்துப் பிரச்சினைகளும் களையப்படும் என்றும் உறுதி அளித்தார்.