எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது தொடர்பான அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடந்தது. இதில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் இடம் இல்லை என்றார். மேலும் கமல்ஹாசனின் கட்சி 4 அமாவாசைக்குள் காணாமல் போய்விடும் என்றார்.