சாதி கலவரத்தை அரசியல்வாதிகள் தான் உருவாக்குகிறார்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தருமபுரி அருகே பல்வேறு கிராமங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அவர், தருமபுரியில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, வேலை வாய்ப்பை அரசு வழங்க வேண்டும் எனவும் மக்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டதாகவும் கூறினார். தேர்தலில் ஓட்டுகளை விற்க வேண்டாம் எனவும் பொதுமக்களை கமல்ஹாசன் கேட்டுக் கொண்டார்.