அரசியல்

இன்று கட்சியின் பெயரை பதிவு செய்கிறார் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இன்று காலை டெல்லி செல்கின்றனர். தேர்தல் ஆணையத்தில் இன்று கட்சியின் பெயரை பதிவு செய்கின்றனர்.

தந்தி டிவி

இன்று கட்சியின் பெயரை பதிவு செய்கிறார் கமல்ஹாசன்

கடந்த நவம்பரில் மக்கள் நீதி மய்யம் என்னும் அமைப்பை தொடங்கிய கமல் அதை கட்சியாக பதிவு செய்ய தலைமை தேர்தல் ஆணையத்தில் விண்ணபித்திருந்தார். இந்த பெயருக்கு ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. ஆனால் யாரும் ஆட்சேபணை தெரிவிக்காததையடுத்து, கட்சியை பதிவு செய்வது தொடர்பாக கமல்ஹாசனை ஜூன் 20ம் தேதி நேரில் ஆஜராக தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்தது. இதனையடுத்து இன்று காலை டெல்லி செல்லும் கமல்ஹாசன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 11 மணி அளவில் தேர்தல் ஆணையத்தில் ஆஜர் ஆவார்கள் என்று கூறப்படுகிறது. இது குறித்து ஜூன் 3ம் தேதியே தந்தி டிவி செய்தி வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்