அரசியல்

"முதலமைச்சரானால் முதல் கையெழுத்து எதற்கு ?" - கமல்ஹாசன் பதில்

முதலமைச்சரானால் உங்களுடைய முதல் கையெழுத்து எதற்கு என்று கேட்கப்பட்ட கேள்விக்கு லோக்பால் சட்டத்தை வலிமையாக்கவே முதல் கையெழுத்து போடுவேன் என்றும் கமல் தெரிவித்தார்

தந்தி டிவி

சென்னை ஆழ்வார்பேட்டையில் பெண்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கலந்துகொண்டார். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய பெண்களுக்கு விருதுகளை வழங்கி அவர் கவுரவித்தார். பின்னர் பேசிய அவர், அரசியலைக் கண்டு ஒதுங்கி நிற்காமல், பெண்களும் அரசியலில் தவறாமல் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

இதை தொடர்ந்து, விழா மேடையில் நடிகர் பார்த்திபன் எழுப்பிய கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதிலளித்தார். முதலமைச்சரானால் உங்களுடைய முதல் கையெழுத்து எதற்கு என்று கேட்கப்பட்ட கேள்விக்கு தற்போதைய லோக்பால் சட்டம் வெறும் கண் துடைப்பு என்றும் எனவே, மீண்டும் லோக்பால் சட்டத்தை வலிமையாக்கவே முதல் கையெழுத்து போடுவேன் என்றும் கமல் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்