அரசியல்

விஷ சாராய மரணங்கள்.. கருப்பு சட்டையில் கொதித்த விஜய பிரபாகரன்

தந்தி டிவி

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களை முதலமைச்சர் நேரில் சென்று சந்திக்காதது கண்டித்தக்கது என விஜய பிரபகாரன் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் விஜய பிரபாகரன் தலைமையில் தேமுதிக சார்பில் திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஜய பிரபாகரன், கள்ளசாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக போராடி வருவதை அரசியல் வியூகம் என்று கூற முடியாது எனக் கூறினார். மேலும், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்திக்காத முதலமைச்சர், சம்பவம் குறித்து அறிக்கை விடுவதும், சட்டசபையில் உரையாற்றுவதும் கண்டித்தக்கது எனத் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்