அரசியல்

Kallakurichi MLA Issue| இத்தனை நாள் இதற்காக தான் புகார் அளிக்காமல் தவிர்த்தாரா கலெக்டர்?

Kallakurichi MLA Issue| இத்தனை நாள் இதற்காக தான் புகார் அளிக்காமல் தவிர்த்தாரா கலெக்டர்?

thanthitv

உயரிய பொறுப்பில் இருப்பவர் பாலியல் துன்புறுத்தல் குறித்துப் புகாரளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பது, நம் குடியரசுக்கு ஒரு துயரமான நாள் என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ-வுக்கு எதிராக வழக்குப்பதியக் கோரிய மனு மீது, உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமி நாராயணன், தேவையற்ற விளம்பரத்தை விரும்பாத காரணத்தாலேயே, மாவட்ட ஆட்சியர் புகார் அளிக்காமல் விலகித் தவிர்த்திருந்தது தெரியவருவதாக குறிப்பிட்டுள்ளார். அரசுப் பணியில் மிக வலிமையான பதவிகளில் ஒன்றான மாவட்ட ஆட்சியருக்கே இத்தகைய நிலை ஏற்பட்டிருக்கிறது என்றால், குறைந்த அதிகாரப் பொறுப்பில் உள்ள ஒருவர், பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டத்தின் கீழ் புகார் அளிக்க நேரிட்டால், நிலைமை என்னவாகும் என்று நினைத்தாலே அச்சமாக இருக்கிறது என அவர் கூறியுள்ளார். மேலும், துன்புறுத்தல் என்பது காலம், இடம், பொருளாதார நிலை, அந்தஸ்து அல்லது ஒரு பெண் வகிக்கும் பதவி என எதையும் கருத்தில் கொள்வதில்லை என்பதையே இது காட்டுகிறது எனவும் நீதிபதி தமது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்

Kallakurichi TVK MLA Case | போலீஸ் ஸ்டேஷன் வரும் கள்ளக்குறிச்சி MLA? வந்து இறங்கிய IPS சிருஷ்டி சிங்

Gold Price Today | அதல பாதாளம் சென்ற தங்கம் விலை.. இன்ப அதிர்ச்சி கொடுத்த இன்றைய நிலவரம்

DVAC Raid| தமிழகத்தில் அடுத்த பரபரப்பு.. 11 இடங்களில் நுழைந்து DVAC அதிரடி

Sivagangai | Crime | விரட்டி விரட்டி விவசாயி வெட்டிக்கொ*ல - பட்டப்பகலில் நிகழ்ந்த கொடூரம்

Kallakurichi MLA Issue | ``இன்றே ஆஜராக வேண்டும்..’’ - நேராக MLA வீட்டுக்கே சென்ற அதிகாரிகள்..