அரசியல்

வருமான வரித்துறை சோதனை : திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் உயர் நீதிமன்றத்தில் வழக்கு

தங்கள் நிறுவனங்கள் மீதான வருமான வரி சோதனைகளை உடனடியாக நிறுத்துமாறு திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

தங்கள் நிறுவனங்கள் மீதான வருமான வரி சோதனைகளை உடனடியாக நிறுத்துமாறு திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகிறார் எனவும், கடந்த 30ம் தேதி முதல் துரைமுருகன் மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும், இதனால், தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் கதிர் ஆனந்த் தரப்பு வழக்கறிஞர் முறையிட்டார். இதையடுத்து, இந்த முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிப்பதாக நீதிபதி அனிதா சுமந்த், கூறினார். இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் மனுவாக தாக்கல் செய்யப்பட உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்