எதிர்வரும் காலத்தில் பாரத பிரதமரை நிர்ணயம் செய்யும் சக்தியாக அதிமுக இருக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். நெல்லையில் நடைபெற்ற அதிமுக அம்மா பேரவை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் பயிற்சி பெற்ற முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் வெற்றிக்கூட்டணி அமைப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.