அரசியல்

Kadambur Raju | தீவிர வாக்கு சேகரிப்பில் கடம்பூர் ராஜு

தீவிர வாக்கு சேகரிப்பில் கடம்பூர் ராஜு

thanthitv

முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தீவிர வாக்கு சேகரிப்பு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவில்பட்டி தொகுதியில் நான்காவது முறையாகப் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, இன்று காலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திட்டங்குளம் தினசரி காய்கறி சந்தையில் வியாபாரிகளை நேரில் சந்தித்த அவர், இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். தொடர்ந்து, கோவில்பட்டி சாலையில் அமைக்கப்பட்டுள்ள அதிமுக கூட்டணி தேர்தல் பணிமனையைத் திறந்து வைத்த அவர், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பிரச்சாரத்தின் போது பதநீர் அருந்தியபடி பொதுமக்களுடன் இயல்பாகக் கலந்துரையாடிய அவரோடு, அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு