அரசியல்

Venkatesan || நீதிபதி விமர்சனம் – சு.வெங்கடேசன் மீண்டும் பதிலடி

நீதிபதி விமர்சனம் – சு.வெங்கடேசன் மீண்டும் பதிலடி

thanthitv

Venkatesan || நீதிபதி விமர்சனம் – சு.வெங்கடேசன் மீண்டும் பதிலடி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் விமர்சனத்துக்கு, மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் மீண்டும் பதிலடி கொடுத்துள்ளார். முதலாவதாக, பெரியார் அறிவுலக புத்தகக் கொள்முதல் முறைகேடு விவகாரத்தில், நீதிபதியின் கருத்துக்கு ஊழலுக்குத் தண்டனை வழங்குவதுதான் நீதிபதிகளின் வேலை... பரிகாரம் கூறுவது ஜோதிடர்களின் வேலை என சு.வெங்கடேசன் விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலளித்த நீதிபதி, ரயில் நிலையத்திற்கு சு.வெங்கடேசன் பென்ஸ் காரில் வந்து இறங்கியதாகவும், முதல் வகுப்பில் பயணிப்பதாகவும் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எம்.பி. வெங்கடேசன், அந்தக் கார் தன்னுடையது இல்லை என்றும், தனக்குச் சொந்தமாக கார் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். எம்.பி.க்கான பயண உரிமையின் அடிப்படையிலேயே முதல் வகுப்பில் பயணிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஆடை, கார், பயணிக்கும் வகுப்பை வைத்து விமர்சிப்பது மலிவான தனிநபர் தாக்குதல் எனக் குறிப்பிட்டுள்ள அவர், கம்யூனிஸ்ட் என்பதில் பெருமை கொள்வதாகவும், பகுத்தறிவுக்கான போராட்டத்தில் தொடர்ந்து முன்நிற்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

High Court | Cattles | சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் - உயர்நீதிமன்றம் உத்தரவு

BREAKING || தி.மலை தீபம் கானவரும் பக்தர்களுக்கு நற்செய்தி - முதல்முறையாக இலவசம்

BREAKING || துரைமுருகன் மீதான பரபரப்பு புகார் - வெளியானது FIR

Dindigul | death பறிபோன 3 பிஞ்சு உயிர்கள் சோகத்தில் மூழ்கிய கிராமம்

Checkanurani | TN Police | செக்கானூரணி காவல் மரணம்.. 5 மணிநேரத்தை தாண்டி பரபரக்கும் விசாரணை