அரசியல்

பாஜகவில் இணைந்தார் ஜோதிர் ஆதித்ய சிந்தியா

டெல்லியில் உள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில், அந்த கட்சியில் ஜோதிர் ஆதித்ய சிந்தியா இணைந்தார்.

தந்தி டிவி

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜோதிர் ஆதித்ய சிந்தியா, அந்த கட்சியில் இருந்து விலகி, இன்று பாஜகவில் இணைந்தார். டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இணைப்பு விழாவுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆதித்ய சிந்தியா, பாஜகவில் தம்மை இணைத்து கொண்டதற்காக மோடி மற்றும் அமித்ஷாவுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், தமது தந்தை இறந்த நாளையும், தாம் பாஜகவில் இணைந்த நாளையும் எப்போதும் மறக்க முடியாது என சிந்தியா குறிப்பிட்டார். தான் உயிராக நினைக்கும், மத்தியபிரதேச மாநிலத்திற்கு, காங்கிரஸ் கட்சியில் இருந்த படி, எதுவும் செய்ய முடியவில்லை எனவும் முன்பு இருந்த காங்கிரஸ் கட்சி தற்போது இல்லை எனவும் அவர் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்