தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, திருப்பரங்குன்றம் அருகே பெருங்குடியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாராளுமன்ற தேர்தலோடு திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் வரும் என்றும், அதில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று தெரிவித்தார். ஜெயலலிதாவை மக்களை பார்த்துக் கொண்டது போல் பார்த்து வருவதாகவும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்படுவது மூலம், ஜெயலலிதாவின் கனவு நனவாக போவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.