அரசியல்

ஜெகன் தங்கை அரசியல் பிரவேசம் - சிங்கம் சிங்கிளாதான் வரும்" என முழக்கம்

தெலுங்கானாவில் புதிய அரசியல் கட்சியை தொடங்கப்போவதாக ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஜெகன் தங்கை அரசியல் பிரவேசம் - சிங்கம் சிங்கிளாதான் வரும்" என முழக்கம்

தெலுங்கானாவில் புதிய அரசியல் கட்சியை தொடங்கப்போவதாக ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.தெலுங்கானாவில் மறைந்த தமது தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் ஆட்சியை கொண்டு வரப்போவதாக ஒய்.எஸ். ஷர்மிளா ஏற்கனவே அறிவித்து இருந்தார். இதனையடுத்து தந்தையின் ஆதரவாளர்களை தொடர்ந்து சந்தித்து பேசிவந்த அவர், ஆந்திராவின் கம்மம் மாவட்டத்தில் சங்கல்ப சபா கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். இந்த கூட்டத்திற்காக ஐதராபாத்தில் இருந்து கார் மூலம் பேரணியாக வந்த அவர், வழியில் மக்களிடம் பேசினார். பின்னர் கம்மம் கூட்டத்தில் ராஜசேகர ரெட்டியின் பிறந்த நாளன்று கட்சியின் பெயர் அறிவிக்கப்படும் என ஒய்.எஸ். ஷர்மிளா அறிவித்தார். அப்போது சிங்கம் சிங்கிளாதான் வரும் என ரஜினி பட டைலாக்கை பேசிய அவர், தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி, பாஜக அல்லது காங்கிரஸ் ஏவும் அம்பு தாம் கிடையாது என்றும் அவர்களை இலக்காக்க மக்கள் ஏவும் அம்புதான் தாம் என்றும் கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்