அரசியல்

ஜெயலலிதா நினைவு இல்லத்தின் சாவி : அரசே வைத்துக் கொள்ளலாம் - உயர்நீதிமன்றம்

ஜெயலலிதா நினைவு இல்லத்தின் சாவியை அரசே வைத்துக் கொள்ளலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

ஜெயலலிதா நினைவு இல்லத்தின் சாவியை அரசே வைத்துக் கொள்ளலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மறைந்த முதலைமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் நினைவு இல்லமாக நேற்று திறக்கப்பட்டது.நினைவு இல்லத்துக்கு எதிராக தீபா மற்றும் தீபக் தொடர்ந்த வழக்கில், நினைவு இல்லத்தை திறக்க அனுமதி வழங்கி, அதன் சாவியை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்க நேற்று முன் தினம் உத்தரவிடப்பட்டது.இந்த உத்தரவுகளை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது வேதா நிலையத்தை கையகப்படுத்துவது தொடர்பாக தீபா, தீபக்கிடம் ஆட்சேபங்கள் கேட்கப்பட்டதாகவும்,இழப்பீட்டு தொகையை நீதிமன்றத்தில் செலுத்தி உள்ளதால், சாவியை அரசு வைத்திருப்பதால் மனுதாரர்களுக்கு பாதிப்பு இல்லை என அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.இதை ஏற்ற நீதிபதிகள், ஜெயலலிதா நினைவு இல்லத்தின் சாவியை அரசே வைத்துக் கொள்ளலாம் எனக் கூறி,சாவியை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவிற்கு தடை விதித்தனர்.அதே சமயம், பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்க கூடாது என்ற உத்தரவை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதிகள்,வேதா நிலையத்தை அரசே தொடர்ந்து பராமரிக்கலாம் என அறிவித்தனர்.மேலும், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு தீபா, தீபக் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 3ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்