கொரோனா காலத்தில் போடப்பட்ட 10 லட்சம் விதிமீறல் வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்,.
தென்காசி மாவட்டம் கடைநல்லூர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், கூடங்குளம் போரட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்த வழக்குகள் அனைத்தும் சட்டதிட்டங்களுக்கு உட்படுத்தப்பட்டு ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார்.மேலும், சி.ஏ.ஏ போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் கைவிடப்படுகிறது என்றும் கொரோனா காலத்தில் போடப்பட்ட 10 லட்சம் விதிமீறல் வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்,. போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தது, கலவரத்தில் ஈடுபட்டது உள்ளிட்டவை தவிர மற்ற அனைத்து வழக்குகளிலும் பொதுமக்களின் நலன் கருதி மேல் நடவடிக்கைகள் கைவிடப்படுகிறது எனவும் முதலமைச்சர் கூறினார்