அரசியல்

ப.சிதம்பரம் வழக்கு : மேத்தா உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்

அமலாக்கத்துறை, சிபிஐ தொடர்ந்த வழக்குகளில் ஜாமின் கேட்டு ப.சிதம்பரம் தொடர்ந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணையை பிற்பகலுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

தந்தி டிவி

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தொடர்ந்த வழக்கில், ஜாமின் கேட்டு ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ப.சிதம்பரம் தரப்பு வாதம் ஏற்கனவே முடிந்த நிலையில், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தரப்பு வாதம் நடந்தது. அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிதம்பரத்தின் முன்ஜாமின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டால், விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்றோரின் வழக்குகளும் பாதிக்கப்படும் என சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் இருந்து சிதம்பரம் தப்பிக்க நினைக்கிறாரா, இல்லையா என்பதை விசாரணை அமைப்பு முடிவு செய்யும் என்றார். சாட்சிகள், ஆதாரங்கள், ஆவணங்களை அழிப்பது, பண பரிவர்த்தனையை தடுப்பது உள்ளிட்ட நோக்கங்களே கைதுக்கு காரணமாக இருக்க முடியும் என துஷார் மேத்தா தெரிவித்தார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சிதம்பரம் உள்ளிட்டோரிடமிருந்து உண்மையை வெளிக்கொணர்வது அமலாக்கத்துறையின் கடமை என்றும் அவர் உச்சநீதிமன்றத்தில் வாதம் செய்தார். பொருளாதார குற்றங்கள் ஒருவரை கத்தியால் குத்துவதுபோல இல்லாவிட்டாலும், அவை தேசத்திற்கு எதிராக பயங்கரமான குற்றமாகும் என வாதத்தின் போது துஷார் மேத்தா எடுத்துரைத்தார். வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், உணவு இடைவேளைக்கு பிறகு பிற்பகலுக்கு 2 மணிக்கு விசாரணை தொடரும் என தெரிவித்தனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு