அரசியல்

உருவானது இந்திரா பவன்... காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம்

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் டிசம்பர் 28 ஆம் தேதி டெல்லியில் திறக்கப்படுகிறது.

தந்தி டிவி

டெல்லி ஐடிஓ பகுதியில் 150 கோடி ரூபாய் மதிப்பில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு நவம்பரில் தொடங்கிய கட்டுமான பணிகள், கடந்த ஆண்டே நிறைவடைந்திருக்க வேண்டும். ஆனால், நிதி நெருக்கடியால் பணியில் அவ்வப்போது தொய்வு ஏற்பட்டது. அதுவும் கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரை முற்றிலுமாக பணிகள் நிறுத்தப்பட்டன.

இதுபோன்ற காரணங்களால் 3 ஆண்டுகளாக இழுபறியாக இருந்த கட்டுமான பணிகள், தற்போது ஒரு வழியாக நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபன தினமாக டிசம்பர் 28 ஆம் தேதியன்று தலைமை அலுவலக கட்ட‌டம் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'இந்திரா பவன்' என பெயர் சூட்டப்பட்டள்ள இந்த கட்ட‌டத்தில், 6 மாடிகளை கொண்டது. ஆறாவது மாடியில் உள்ள அலுவலகம், சுமார் 21 ஆயிரத்து எட்டு சதுர அடி பரப்பளவில் அதிநவீன முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கு ஐந்தாம் மாடியில் பிரத்யேகமாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சியின் தேசிய அளவிலான முக்கிய தலைவர்கள் மட்டுமே அந்த தளத்திற்கு சென்று வரும் அளவிற்கு மிகவும் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக இந்த பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் அடையாளமாக விளங்கப்போகும் தங்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தை வரவேற்க, காங்கிரஸ் கட்சியினர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி