அரசியல்

இந்தியா கூட்டணி - பிரதமர் யார்? - ராகுல் சொன்ன முக்கிய தகவல்

தந்தி டிவி

நியாய பத்திரம் என்ற பெயரில் மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பதிலளித்தார். அப்போது பேசிய அவர், நடைபெறுகின்ற தேர்தல் ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தையும் அழிக்க நினைப்போருக்கும் அதை காப்பாற்ற நினைப்பவருக்கும் இடையிலான தேர்தல் என குறிப்பிட்டார். பாஜக 180 தொகுதிகளை கூட தாண்ட போவதில்லை என குறிப்பிட்ட ராகுல் காந்தி, 2004 தேர்தல் முடிவுகளை காங்கிரஸ் கட்சி பெற்று, மீண்டும் ஆட்சி அமைப்போம் என நம்பிக்கை தெரிவித்தார். தேர்தல் பத்திரம் என்பது பா.ஜ.க. மீதான குற்றப்பத்திரிக்கை என தெரிவித்த ராகுல் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இதுவே அதிகமான ஆதாரம் எனக் குறிப்பிட்டார். இந்திய கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், சித்தாந்த அடிப்படையிலான இந்த தேர்தலை அனைவரும் ஒன்றுபட்டு சந்திப்பது என இந்தியா கூட்டணி முடிவு செய்திருப்பதாகவும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு கூட்டணி கட்சியின் அனைவரும் ஒன்றிணைந்து தலைவர் மற்றும் பிரதமர் யார் என்பதை முடிவு செய்வார்கள் என்றும் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை