அரசியல்

சீனாவை சுற்றி... நச்சென நங்கூரத்தை போட்ட PM மோடி... உறுதியாக சொன்ன லாவோஸ்

தந்தி டிவி

அரசு முறை பயணமாக லாவோஸ் நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி 2ம் நாளான இன்று அந்நாட்டின் பிரதமர் சிபாண்டோனை சந்தித்து இருதரப்பு உறவுகள் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தினார். பேரிடர் மேலாண்மை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பாரம்பரிய மறுசீரமைப்பு, பொருளாதார உறவுகள், பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் மக்களிடையேயான உறவுகள் குறித்தும் இருவரும் விவாதித்தனர்.

பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து பாதுகாப்பு ஒளிபரப்பு சுங்கத்துறை ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

லாவோஸ் நாட்டில் ஊட்டச்சத்து பாதுகாப்பை மேம்படுத்த இந்தியா சுமார் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியுதவியாக வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்