#tvk #vijay தவெக பிரசார வாகனத்தை போலீஸ் பறிமுதல் செய்ய முயன்றதால் பரபரப்பு கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பரப்புரை வாகனத்தில் விளம்பர ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டபோது, காவல்துறையினர் வாகனத்தை பறிமுதல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பறிமுதல் செய்ய வந்த காவலர்களிடம், அனுமதி பெறாமல் சாலையில் சென்றால் மட்டும் தான் பறிமுதல் செய்ய முடியும் என அக்கட்சியின் வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தலையிட்டு விசாரணை நடத்தினர். இறுதியில், அதிகாரிகள் வேலை முடிந்தவுடன் ஸ்டிக்கரை முழுவதுமாக மறைத்துவிட்டு, சாலையில் எடுத்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர். இதன் பிறகு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனம் முழுவதும், தார்பாய் கொண்டு மறைத்து எடுத்து செல்லப்பட்டது.