அரசியல்

தடையை மீறி பேனர் : தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு நோட்டீஸ்...

தடையை மீறி பேனர்கள் வைத்ததாக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

தந்தி டிவி
சென்னை உயர்நீதிமன்றம் பேனர்கள் வைக்க இடைக்கால தடை விதித்தும், இந்த உத்தரவை அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் மதிக்கவில்லை எனக் கூறி, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையை வரும் 13ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்ட நீதிபதிகள் அதிமுக, திமுக, உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கும், தமிழக தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல் ஆணையர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்