"அதிமுக ஆட்சிக்கு வந்தா.. முதல் வேலை.." - EPS சொன்னதும் கூட்டத்தில் இருந்து வந்த சத்தம் #EPS #aiadmk #election2026 #tnelection2026 #thanthitv சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடினார். தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் குற்றம்சாட்டிய ஈபிஎஸ், மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் அம்மா உணவகங்கள் அனைத்தும் சீரமைக்கப்பட்டுச் சிறப்பாகச் செயல்படும் எனவும் வாக்குறுதி அளித்தார்.